1750 ல் வெள்ளையர்களை எதிர்த்து மிரட்டல் விடுத்து போருக்கு அழைத்த முதல் விடுதலை வீரர்கள் அழகுமுத்துக்கோன் சகோதரர்கள்


 Konar Yadhavar first Freedom Fighter in India alagumuthukonar psd file

இந்தியாவின் முதல் விடுதலை வீரர் அழகுமுத்துக்கோன்

 1750 ல் தந்தை இறந்த அதே ஆண்டு, மன்னனாக முடிசூடி வெள்ளைக்காரனுக்கு கப்பம் கட்ட முடியாது என ஆங்கிலேயர்களுக்கே மிரட்டல் விடுத்து போருக்கு அழைத்த வீரர்கள் அழகுமுத்துக்கோன் யாதவ், சின்ன அழகுமுத்து யாதவ்.

மாவீரன் அழகுமுத்துக்கோன் வம்சாவழியினர் வைத்துள்ள செப்பு பட்டையத்தில் மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், அவர் கிருஷ்ணகோத்ரம் கோபால வம்சத்தில் யாதவ குலத்தில் பிறந்துள்ளார் என்று தெரியவருகிறது.

'''கட்டாலங்குள மன்னர்கள்

''' (அழகுமுத்து மன்னர்கள்/''Kattalankulam kings'')

== கிருஷ்ண கோனார் ==

கட்டாலங்குளத்தில் அழகுமுத்துவின் வம்சாவளியினர் மன்னர்களாக ஆண்டு வந்தனர். கோனார் சமுதாயத்தில் பிறந்த அழகுமுத்துக்கோன் தலைமுறையினர் பலம் வாய்ந்த போர் வீரர்களாகவும் அரசர்களாகவும் மிகச்சிறந்த சேர்வைக்காரர்களாகவும் திகழ்ந்தனர். இவர்கள் தாய் நாட்டின் மீதும் தங்களது மண்ணின் மீதும் மிகுந்த பற்று கொண்டவர்கள் ஆவார்கள்.சேர்வைக்காரன் என்ற பட்டம் வாள் வீச்சு, காளையை அடக்குதல், வளரி ஏவுதல், சிலம்பாட்டம், வில் வித்தை, மல்யுத்தம் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கக்கூடியது ஆகும். கட்டாலங்குளத்தின் ஐந்தாம் அரசராக இருந்த விஷ்வநாத அழகுகோன் இறந்த பின்பு 1692 ல் கிருஷ்ண கோன் ஆறாவது மன்னராக முடிசூட்டிக் கொண்டார்.இவர் தன்னுடைய ராஜ்ஜியத்தை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காக பதிமூன்று முறை போர்களை சந்தித்து வெற்றி பெற்றுள்ளார்.


== கெச்சிருளன் கோனார் ==

கிருஷ்ணப்பக்கோனாருக்குப்பிறகு ஏழாவது அரசராக கட்டாலங்குளம் சீமையில் அரசராக பதவி ஏற்றார். கட்டாலங்குளம் அரசராக இருந்த கெச்சிருளன் கோனார் எட்டப்பரின் படைகளுக்கு மிகச்சிறந்த தளபதியாக விளங்கினார்.எட்டப்பருக்கு எட்டயபுரம் உடல் என்றால் கட்டாலங்குளம் உயிர். இவரது படை தென்காசியில் செல்வந்தர் படையுடன் மோதி 15 கிராமங்களை கைப்பற்றினர்.எட்டப்பருக்கு இராமநாதபுரம் அருகேயுள்ள சூரன்குடியில் எதிரிகள் இருந்ததால் அவர்களை அடக்க குமாரெட்டு என்ற அதிகாரியையும் அழகுமுத்துகோனாரின் தாய் மாமனான கெச்சிளன் கோனார் இருவரையும் நியமித்தார் எட்டப்பர். இருவரும் பெரும் படையுடன் சென்று சூரன்குடி கோட்டையை தகர்த்து வாளால் பல வீரர்களை வெட்டி எரிந்தனர். பின்னர் சூரன்குடி கோட்டையை கைப்பற்றிய கெச்சிருளன் கோனார் சூரன்குடி போர் வீரரால் மறைந்திருந்து வெடி மருந்துகளால் சுடப்பட்டு வீர மரணம் அடைந்தார்.


== அழகுமுத்து ராஜா==

எட்டயபுரம் பாளையம் சூரன்குடியைக் கைப்பற்றிய பிறகு கெச்சிருளன் கோனாருக்கு வாரிசுகள் இல்லாததால் அவரது அக்கா மகனான அழகுமுத்துக்கோனாரை 1725ல் ஏழாவது அரசராக நியமித்தனர்இவரது வீரத்தால் மதம் பிடித்த யானையை அடக்கும் அசாத்திய துணிச்சல் கொண்டவர். வெங்கடேஷ்வர எட்டப்பர் இவரது வீரத்தை கண்டு தன் படைக்கு தலைமை தளபதி பொறுப்பை வழங்கினார்.கட்டாலங்குளத்தில் வலிமையான ஆட்சியை நிறுவினார். அழகுமுத்துக்கோனாருக்கும் அழகுமுத்தம்மாளுக்கும் மகனாக 1728ல் வீர அழகுமுத்துக்கோன் பிறக்கிறார்.1729ல் சின்ன அழகுமுத்து பிறக்கின்றார்.மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தைக்கு அரண்மனையின் தெய்வமான அழகுஅரியநாச்சி என்று பெயர் சூட்டினர்.


=== அனுமந்தக்குடிப்போர் ===

1750ல் எட்டையபுரத்தை ஆட்சி செய்த வெங்கடேஷ்வர எட்டப்பர் இராமநாத சேதுபதிக்கு உதவ எட்டயபுரம் தளபதி பெரிய முத்துப்பிள்ளையையும் கட்டாலங்குளம் மன்னர் அழகுமுத்துக்கோனாரையும், 6000 படை வீரர்களையும் அனுமந்தகுடிக்கு அனுப்பி வைத்தார்.இருவரின் போர் திறமையினால் கோட்டையை கைப்பற்றினர்.ஆனால் இருவரும் போரில் வீர மரணம் அடைந்தனர்.

தந்தை இறந்த அதே ஆண்டு 1750 ல் அழகுமுத்துக்கோனாரின் மூத்த மகனான வீர அழகுமுத்துக்கோன் தன்னுடைய 22ஆம் வயதில் எட்டாவது மன்னராக முடிசூட்டிக் கொண்டார். இவரே இந்தியாவின் முதல் விடுதலை வீரர் என அழைக்கப்படுபவர் ஆவார்.

வீர அழகுமுத்துக்கோன்

இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர். கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர். இவர் கோனார் சமுதாயத்தில் பிறந்தவர் ஆவார். மன்னர் வீர அழகுமுத்துக்கோனுக்கு ஜெகவீரராமபாண்டிய எட்டப்பன் என்கிற எட்டயபுரம் மன்னர் சிறந்த நண்பராக விளங்கினார். இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857 என்று அறியப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே இந்தியாவின் பல இடங்களில் போர் நடந்துள்ளது. அதில் முதன்மையானவர் மன்னர் வீர அழகுமுத்துக்கோன்.

அழகுமுத்துக்கோன் தலைமுறையினர் அரசர்களாகவும் பலம் வாய்ந்த போர் வீரர்களாகவும் மிகச்சிறந்த சேர்வைக்காரர்களாகவும் திகழ்ந்தனர். இவர்கள் கூறுகின்ற வார்த்தைகளுக்கு சுற்றி உள்ள பாளையங்கள் கட்டுப்பட்டன.

தென் தமிழகத்தில் மதுரையை மையமாக வைத்து 72 பாளையங்கள் உள்ளன.ஆங்கிலேயர்கள் அதில் மிகப்பெரிய ஆட்சிகளை கொண்டிருக்கும் இரண்டு பாளையமான பாஞ்சாலங்குறிச்சி மற்றும் எட்டயபுரம் பகுதிகளை கைப்பற்றி விட்டால் மற்ற பகுதிகளை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று எண்ணினர் .

1750ல் கட்டாலங்குளம் மற்றும் எட்டயபுரம் பாளையம் ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்துமாறு அறிக்கை விடப்பட்டது.

எட்டயபுரம் அரசவையில் சின்ன அழகுமுத்து கோன், ஜெகவீரராம எட்டப்பர், அழகுமுத்துக்கோன்,குருமலைத்துரை ஆகியோர் தலைமையில் ஆலோசனை குழு நடத்தப்பட்டது.இதில் ஆங்கிலேயர்களின் அறிக்கையால் கோபமடைந்த அழகுமுத்துக்கோன் கடுமையாக எதிர்த்து பாளையக்காரர்கள் யாரும் வரி செலுத்த கூடாது என கட்டளையிட்டார்.மேலும் அழகுமுத்து சகோதரர்கள் ஆங்கிலேய அரசுக்கு பதில் கடிதம் ஒன்றை அனுப்பினர். அதில் கூறியிருப்பதாவது, எங்கள் நாட்டில் வணிகம் செய்ய வந்த வெள்ளையனுக்கு நாங்கள் ஏனடா வரி செலுத்த வேண்டும்?? வரி வசூலிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தால் கட்டாலங்குளம் மண்ணில் கும்பினியர்களின் தலைகள் உருளும் என்று மிரட்டல் விடுத்தார். அதிர்ந்து போன ஆங்கிலேய அரசு ஆங்கிலேய படை ஒன்றை 1751ல் கட்டாலங்குளம் பகுதிக்கு அனுப்பியது. கட்டாலங்குளத்திற்கு வந்த ஆங்கிலேய படையை சுற்றி வளைத்த அழகுமுத்துக்கோனின் போர் வீரர்கள் ஆங்கிலேயர்களை வெட்டி வீழ்த்தினர்.

பலரது தலைகளை வெட்டி வீழ்த்திய அழகுமுத்துக்கோன், ஆங்கிலேய அரசை எச்சரிக்கும் வகையில் ஒரு சிலரை மட்டும் உயிருடன் விட்டு இரத்த கரையுடன் கூடிய தனது வாளை கொடுத்து உங்களை அனுப்பியவனிடம் இதனை கொடுத்து அழகுமுத்துக்கோனின் உயிர் இருக்கும் வரை தனது தாய் மண்ணில் இருந்து ஒரு பிடி மண் கூட கப்பமாக கட்ட முடியாது என்று கூறியதை தெரிவிக்குமாறு அவர்களை விரட்டி அடித்தனர்.

பிறகு பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போர் முழக்கம் செய்தார் அழகுமுத்துக்கோன்.

1755 ல் பூலித்தேவன் படையுடன் திருவிதாங்கூர் படையையும் சேர்த்து அழகுமுத்துக்கோனின் படை கர்னல் எரோன் கெரான் படைக்கு எதிராக போரிட்டு வெற்றி கண்டது.

பலம் வாய்ந்த வீரர்களை கொண்ட பாளையமாக கட்டாலங்குளம் மற்றும் எட்டயபுரம் திகழ்ந்தது. இதனைக் கண்ட ஆங்கிலேய அரசு அச்சமும் கோபமும் அடைந்தது. 1755 ல் அழகுமுத்துக்கோனின் தலைமையில் மற்றுமொரு போரும் நடந்தது இதில் தனது தம்பி சின்ன அழகுமுத்து  பெருமாள் கோயில் வாசலில் சுடப்பட்டு வீர மரணம் அடைந்தார். இருப்பினும் போரில் வெற்றி கண்டது.பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க 1756-இல் கான்சாகிப் என்பவரை மதுரை நெல்லைச்சீமைக்கு கமாண்டராக ஆங்கிலேயர் நியமித்தனர்.1757-களில் எட்டயபுரம் ஆங்கிலே யரிடம் சிக்கியது எட்டப்ப நாயக்கரின் தாயதி பூதலபுரம் எட்டையா, கான்சாகிப்பிடம் தன்னை மன்னராகினால் கப்பம் கட்டுகிறேன் என்றான்.  

கான்சாகிப்பின் பீரங்கிப்படை எட்டய புரத்தை தாக்கியது. எட்டயபுரம் ஆங்கிலேயர் வசமானது. விடுதலை வீரர் அழகுமுத்துக்கோன் எட்டப்ப மன்னரைக் காப்பாற்றி அவரை பெரு நாழிகாட்டில் பாதுகாப்பாக வைத் திருந்தார். எட்டயபுரத்தின் பூதலபுரம் எட்டையாவை மன்னராக அறிவித்தான் கான் சாகிப்.  

பூதலபுரம் எட்டையா ஆடம்பர வாழ்வில் திளைத்து கப்பம் கட்டப் பணம் இல்லை என்று மறுத்தான். அவனை கான்சாகிப் கைது செய்து சிறையில் அடைத்தான். ஜெகவீரராம எட்டப்ப நாயக்கரின் தம்பியான குருமலைத் துரையை எட்டப்ப மன்னராக அறி வித்தான் கான் சாகிப். குருமலைத் துரை ரூ.18,700யை கப்பமாக கட்டினான். இதை அறிந்த அழகுமுத்து கொதித்து எழுந்தார்.  

தம் தம்பியே தமக்கும் தன்னுடைய நாட்டுக்கும் துரோகம் செய்து விட்டானே என்று எண்ணி, ஜெக வீரராம எட்டப்பநாயக் கர் பெருநாழி காட்டில் உயிர் துறந்தார். அவர் மகன் வெங்கடேஸ்வர எட்டப்பருக்கு பெருநாழி காட்டிலேயே பட்டம் கட்டினார்கள். மணி மகுடத்தையும் உடை வாளையும் எடுத்துக் கொடுத்து பட்டம் கட்டியவர் விடுதலை வீரர் அழகு முத்துக்கோன் அவர்கள், எட்டயபுர சமஸ்தான விழாக்களில் அழகுமுத்து கோன் பரம்பரையினருக்கே இன்று வரை இந்த உரிமை தரப்பட்டு வருகின்றது.  

இந்த செய்தியை அறிந்த கான் சாகிப் தன்னை அழகுமுத்து கோன் அவமானப்படுத் தியதாக சினம் கொண்டார்.  

எட்டயபுரத்தை மீட்டெடுக்க விடுதலை வீரர் அழகு முத்துகோன் படை திரட் டினார் மாவேலி ஓடை, பெத்தனாயக்கனூர் பகுதி யிலிருந்து வீரர்கள் பலர் படையில் சேர்ந்தார்கள். அவர்களுக்கு அழகு முத்துகோன் போர்ப்பயிற்சி அளித்தார்.  

எட்டயபுரத்தை மீட்பதற்காக பெரிய படை யினை உருவாக்கி அதனை இரண்டு பிரிவாக பிரித்தார் அழகு முத்துகோன். ஒன்றிற்கு மன்னர் வெங்கடேஸ்வர எட்டப்பர் தலைமை, மற்றொன் றிற்கு விடுதலை வீரர் அழகு முத்துக்கோன் தலைமை ஏற்றார். படைகள் இரு வேறு திசையில் புறப் பட்டது. 

அழகு முத்துகோன் தலைமை ஏற்ற படை இரவில் பெத்தனாயகனூர் கோட்டையில் தங்கியது. இதனை உளவறிந்த சிவசங்கரம் பிள்ளை கான்சாகிப் பிடம், இது தான் சரியான தருணம் இப்பொழுது அழகு முத்துவை அழிக்காவிட்டால் எட்டையபுரம் ஆங்கிலேயரிடம் இருந்து பறிபோகிவிடும், பாளையக்காரர்கள் பயம் அற்று போவார்கள், வரி தர மறுப்பார்கள், உங்கள் அதிகாரத்தை எதிர்க்க எல்லோரையும் இணைத்து விடுவான் அழகு முத்துகோன் என்று கூறினார்.  

கான்சாகிப், அழகுமுத்துக் கோன் பெரு நாழிகாட்டில் பட்டம் கட்டியதையும், படை திரட்டி யதையும் எண்ணிப் பார்த்தான். அழகுமுத்துக்கோனின் வீரத்தை பற்றி நன்றாக தெரிந்து கொண்ட கான் சாஹிப் ஒரு தந்திரத்தை பயன்படுத்தினான்.அதன்படி  எட்டையபுரம் அரண்மனையை தாக்கப் போவதாக அறிவித்தான்.நேரடியாக போரிட்டால் அழகுமுத்துக்கோனை வெல்ல முடியாது என எண்ணி இரவோடு இரவாக எந்த ஒரு அறிவிப்பும் இன்றி பெத்தநாயக்கனூர் கோட்டயை முற்றுகையிட்டான். இவனது சூழ்ச்சி மிகுந்த போரில் பல போர் வீரர்கள் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டனர்.பிறகு அழகுமுத்துக்கோனும் அவரது தளபதிகளும் எஞ்சியுள்ள 248 போர் வீரர்களும் சிறைபிடிக்கப்பட்டு இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுகாட்டூர் என்னும் சீமைக்கு இழுத்துச் செல்லப்பட்டனர்.



அழகுமுத்துக்கோன் வீரத்தை கண்டு மெய்சிலிர்த்த கான்சாகிப் அழகுமுத்துக்கோனிடம் உங்களுடைய வீரத்தை போற்றுகிறோம், எட்டயபுரம் மற்றும் கட்டாலங்குளம் பகுதிகளை நீங்களே ஆட்சி செய்யலாம் ஆனால் மன்னிப்பு மட்டும் கேளுங்கள் என்று வற்புறுத்தினான். அழகுமுத்துக்கோன் அதனை மறுத்து துரோகியின் பாராட்டு எங்களுக்கு அவசியமற்றது எனவும் தாய் நாட்டின் விடுதலைக்காக எங்கள் உயிரை விடவும் தயார் எனவும் கர்ஜனை செய்தார். இன்று வெள்ளையனை எதிர்த்து ஒரு அழகுமுத்து, இனி பல்லாயிரம் அழகுமுத்து வெள்ளையர்களை நாட்டை விட்டு துரத்தி அடிப்பார்கள் என்று தான் சாகும் தருவாயிலும் பீரங்கி முன் சிரித்துக்கொண்டே நின்ற மிகப்பெரிய வீரன் அழகுமுத்துக்கோன் பீரங்கியால் வெடித்து பல்லாயிரம் துண்டுகளாக சிதறடிக்கப்பட்டார். இந்திய சுதந்திர வரலாற்றில் இப்படி ஒரு வீர மரணம் எவருக்கும் இல்லை. அதன் பிறகு இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டு இருந்த 248 போர் வீரர்களையும் 6தளபதிகளையும் கொன்று குவித்தது ஆங்கிலேய அரசு.அழகு முத்து கோன், கெச்சிலணன் சேர்வை, வெங்கடேசுவர ரெட்டு சேர்வை, முத்தழகு சேர்வை, பரிவாரம் முத்திருளன் இவரது தம்பி செகவீர ரெட்டுலட்சுமணன், தலைக் காட்டுபுரம் மயிலுப்பபிள்ளை ஆகிய ஏழு பேரையும் பீரங்கி வாயில் கட்டிவைத்து சுட்டுத் தள்ளினார்கள்.  

1759-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த கொடூரம் நிகழ்ந்தது. விடுதலைக்கான விதை தமிழகத்தில் விதைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 -ஆம் தேதி வீரர் அழகுமுத்துக் கோன் நினைவை போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் விழா எடுத்து வருகிறது.  வெள்ளையனை எதிர்த்து முதன்முதலில் போர் தொடுத்த பெருமை தமிழகத்தையே சேரும்.தமிழர்களான நாம் என்றென்றும் அழகுமுத்துக்கோன் அவர்களின் வீரத்தை போற்றி வணங்கிடுவோம்.

நடுக்காட்டு பீரங்கி மேட்டிலிருந்த கல்வெட்டு வாயிலாக இது தெரிய வந்தது என சுபாஷ் சேர்வை யாதவ், ‘முதல் முழக்கமிட்ட மாவீரன் அழகுமுத்து கோன்’ என்ற புத்தகத்தில் கூறுகிறார். பீரங்கி முன் நின்று சாகும் தருவாயிலும் ‘தன்னைச் சேர்ந்தவர்களை காட்டிக்கொடுக்க மாட்டேன், வெளிநாட்டு அரசுக்கு கப்பம் கட்ட மாட்டேன்,’ என்று கூறிய நெஞ்சுரம் மிக்கவர் இவர் என்பதை எட்டையபுரம் சமஸ்தானத்தில் வேலை செய்த சுவாமி தீட்சிதர் என்பவரால் எழுதப்பட்ட “வம்சமணி தீபிகை” குறிக்கிறது. இந்த நுாலில் கிடைத்த அரிய செய்திகளை தொகுத்து எட்டையபுரம் எழுத்தாளர் இளசை ராஜாமணி, ‘சுதந்திர வீரன் அழகுமுத்து யாதவ்’ என்ற புத்தகத்தை இயற்றியுள்ளார். இன்றும் கட்டாலங்குளத்தில் வாழ்ந்து வரும் வீரன் அழகுமுத்துக்கோன் நேரடி வாரிசுகள் அனைவரும் யாதவர்களே ஆவர்.

சிறப்புகள்

பீரங்கி முன் நின்று சாவும் தருவாயிலும் தன்னைச் சேர்ந்தவர்களை காட்டிக் கொடுக்க மாட்டேன் என்று கூறிய நெஞ்சுரம் மிக்கவர் மன்னர் வீர அழகுமுத்துக்கோன் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னர் அழகுமுத்துக்கோன் வம்சத்தில் பலரும் போர்களத்திலேயே வீர மரணம் அடைந்த மாவீரர்கள்.

தென்னகத்தின் சிறந்த குதிரைப்படையை உடையவர்கள் , குதிரைகளை போருக்கு பழக்குவதில் வல்லவர்கள்,மன்னர் அழகுமுத்துக்கோன் வம்சத்தினர்.

பாளையங்கள் உருவாவதற்கு முன்னரே பாண்டியர்களின் சொல்லுக்கு ஆதரவாக நெல்லை சீமையை ஆட்சி செய்தவர்கள் மன்னர் வீர அழகுமுத்துக்கோனின் முன்னோர்கள்.

கட்டாலங்குளத்தை கடந்து செல்லும் எவரும் குதிரை யானை பல்லக்கில் அமர்ந்து செல்லக்கூடாது என கட்டுப்பாடு இருந்தது.

ஆங்கிலேயரால் நியமிக்கப்பட்ட பூதலபுரம் எட்டப்பனை ஏற்றுக்கொள்ளாமல் பெருநாழிகாட்டில் மன்னர் வீர அழகுமுத்துக்கோன் அறிவித்த ஜெகவீரராம பாண்டிய எட்டப்பனின் மகன் வெங்கடேஸ்வர எட்டப்பனையே மக்கள் எட்டையபுரத்தின் பாளையக்காரனாக ஏற்றுக்கொண்டனர்.

காராம் பசும்பாலில் செய்த சத்தியத்திற்கு கட்டுப்பட்டு எட்டப்பன் மீதுள்ள பகையை மறந்து நட்பாகி , நட்புக்காக உயிரையே கொடுத்த வம்சத்தினர் ஆவர்.

வீரத்தை கண்டு எதிரியே பாராட்டிய ஒரே மன்னர் அழகுமுத்துக்கோன் மட்டுமே...


இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இந்த மாவீரரின் வீர வரலாறு பல ஆண்டுகளாக மறைக்கப்பட்டும், திரிக்கப்பட்டும் இருந்தன.விருதுநகரை சேர்ந்த ஆராய்ச்சியாளர் திரு.சுபாஷ் சேர்வை அவர்கள் பல ஆண்டுகளாக கள ஆய்வு செய்து வீர வரலாற்றை வெளிக்கொண்டு வந்தார்.இதற்காக தமிழ் உலகம் அவருக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளது.


#Nellaiking #Chinnaalagumuthukone
#சின்னஅழகுமுத்துக்கோன் 1750ல் ஆங்கிலேயர்களை போருக்கு அழைத்த மாவீரன் சின்ன அழகுமுத்து கோன் வரலாறு; தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் யாதவர் மரபில் மன்னர் அழகுமுத்துக்கோன், அழகுமுத்தம்மாள் தம்பதியர் இவர்களுக்கு மகன்களாக அழகு சகோதரர்கள் எனப்படும் அழகுமுத்துக்கோன் 1728 ஜூலை 11 மற்றும் சின்ன அழகுமுத்து 1729 ஜனவரி 24-ல் பிறந்தனர். சின்ன அழகுமுத்து கோன் தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளம் எனும் அரசவையை ஆட்சிபுரிந்து வந்த தன் அண்ணன் அழகுமுத்துக்கோன் போர் படையின் படைத்தளபதியாக இருந்தார் .இவரது காலம் (1729-1755).இவர் வீரமிகு நெல்லை சிங்கம் என அழைக்கப்பட்டார். சின்ன அழகுமுத்து சேர்வைக்கோனார் நிருவாகத்தில் அண்ணனுக்கு உதவியாக இருந்து கட்டாலங்குளத்தை நல்லாட்சி செய்து வருவதை அறிந்த எட்டையாபுரத்து மன்னர் அழகு சகோதரர்களுடன் நட்புக்கொண்டிந்தார். ஆங்கிலேயருக்கு எதிராக; 1750 ல் எட்டையபுரம் பகுதியை வரி செலுத்துமாறு ஆங்கிலேயர்கள் எச்சரித்தனர். 1750ல் கட்டாலங்குளம் மற்றும் எட்டயபுரம் பாளையம் ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்துமாறு அறிக்கை விடப்பட்டது. ஆங்கிலேயர்களின் அறிக்கையால் கோபமடைந்த அழகுமுத்துக்கோன் எட்டயபுரம் அரசவையில் சின்ன அழகுமுத்து கோன்,ஜெகவீரராம எட்டப்பர்,குருமலைத்துரை அழகுமுத்துக்கோன், ஆகியோர் தலைமையில் ஆலோசனை குழு நடத்தப்பட்டது.இதில் பாளையக்காரர்கள் யாரும் வரி செலுத்த கூடாது என கட்டளையிட்டார் அழகுமுத்துக்கோன். அழகுமுத்து சகோதரர்கள் ஆங்கிலேய அரசுக்கு பதில் கடிதம் ஒன்றை அனுப்பினர். அதில் கூறியிருப்பதாவது, எங்கள் நாட்டில் வணிகம் செய்ய வந்த வெள்ளையனுக்கு நாங்கள் என்றும் கப்பம் கட்ட முடியாது. வரி வசூலிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தால், கும்பினியர்களின் தலைகள் கட்டாலங்குளம் மண்ணில் உருளும், என்று மிரட்டல் விடுத்தார்கள். அதிர்ந்து போன ஆங்கிலேய அரசு ஆங்கிலேய படை ஒன்றை 1751ல் கட்டாலங்குளம் பகுதிக்கு அனுப்பியது. கட்டாலங்குளத்திற்கு வந்த ஆங்கிலேய படையை சுற்றி வளைத்த அழகுமுத்துக்கோனின் போர் வீரர்கள் ஆங்கிலேயர்களை வெட்டி வீழ்த்தினர். பலரது தலைகளை வெட்டி வீழ்த்திய சின்ன அழகுமுத்துக்கோன், ஆங்கிலேய அரசை எச்சரிக்கும் வகையில் எங்களுடைய உயிர் இருக்கும் வரை தங்களது தாய் மண்ணில் இருந்து ஒரு பிடி மண் கூட கப்பமாக கட்ட முடியாது என விரட்டி அடித்தனர். பிறகு பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போர் முழக்கம் செய்தார் வீர (பெரிய அழகுமுத்து) அழகுமுத்துக்கோன்.1755 ல் பூலித்தேவன் படையுடன் திருவிதாங்கூர் படையையும் சேர்த்து அழகுமுத்துக்கோனின் படை கர்னல் எரோன் கெரான் படைக்கு எதிராக போரிட்டு வெற்றி கண்டது. பலம் வாய்ந்த வீரர்களை கொண்ட பாளையமாக கட்டாலங்குளம் மற்றும் எட்டயபுரம் திகழ்ந்தது. இதனைக் கண்ட ஆங்கிலேய அரசு அச்சமும் கோபமும் அடைந்தது. வீர மரணம்; இவர் 1755ல் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக அண்ணன் அழகுமுத்துக்கோனின் படைக்கு தலைமை தாங்கி போரிட்டார். ஆங்கிலேய படையின் ஒரு பிரிவு பெருமாள் கோவிலையும் அதன் உள்ளிருந்த சிலையையும் தகர்ப்பதற்காக வந்தது. அழகுமுத்துவின் தளபதிகள் மற்றும் படை வீரர்கள் பெருமாள் கோவிலை பாதுகாக்க தீரத்துடன் போர்புரிந்து கொண்டிருந்த நேரத்தில் சின்ன அழகுமுத்து ஆங்கிலேயர்களின் துப்பாக்கியால் சுடப்பட்டு 1755ல் பெருமாள் கோவிலின் முன்பு இறைவனை வணங்கியபடி உயிர் துறந்தார். வீரமிகு கோனே நெல்லை சிங்கம் சின்ன அழகுமுத்து என்று ஜெகவீரராம பாண்டியரின் பாராட்டுக்குரியவர்.

கருத்துகள்

கருத்துரையிடுக

Chinna Alagumuthu kone history

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Chinna Alagumuthu kone

Alagumuthukonar Sivagangai Hd Image

அழகுமுத்து சகோதரர்கள்