சின்ன அழகுமுத்து கோன்

அழகுமுத்து சகோதரர்கள் சின்ன அழகுமுத்து தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தை ஆண்ட அழகுமுத்துக்கோனின் தம்பி ஆவார். சின்ன அழகுமுத்து கோனார் சமுதாயத்தில் 1729 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது காலம் (1729-1755). சின்ன அழகுமுத்து சேர்வைக்காரர் நிர்வாகத்தில் அண்ணனுக்கு உதவியாக இருந்து கட்டாலங்குளத்தை நல்லாட்சி செய்து வருவதை அறிந்த எட்டையாபுரத்து மன்னர் அழகு சகோதரர்களுடன் நட்புக்கொண்டிந்தார். பிறப்பு: தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் யாதவர் மரபில் மன்னர் அழகுமுத்துக்கோன், அழகுமுத்தம்மாள் தம்பதியர் இவர்களுக்கு மகன்களாக அழகு சகோதரர்கள் எனப்படும் அழகுமுத்துக்கோன் 1728 மற்றும் சின்ன அழகுமுத்து 1729-ல் பிறந்தனர்.பெரிய வீரப்ப நாயக்கர் எழுதிக் கொடுத்த செப்புப் பட்டயத்தில் இடம் பெற்றுள்ள “கோபால வம்சம், கிருஷ்ண கோத்திரம்” என்ற சொற்களைக் கொண்டு இவர் கோனார் குலத்தைச் சேர்ந்தவர் என்று நாம் அறிகிறோம். ஆங்கிலேயருக்கு எதிராக: இவர் 1755ல் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக அண்ணன் அழகுமுத்துக்கோனின் படைக்கு தலைமை தாங்கி போரிட்டார். ஆங்கிலேய படையின் ஒரு பிரிவு பெருமாள் கோவிலையும் அதன் உள்ளிருந்த சிலையையும் தகர்ப்பதற்காக வந்தது. அழகுமுத்துவின் தளபதிகள் மற்றும் படை வீரர்கள் பெருமாள் கோவிலை பாதுகாக்க தீரத்துடன் போர்புரிந்து கொண்டிருந்த நேரத்தில் சின்ன அழகுமுத்து ஆங்கிலேயர்களின் துப்பாக்கியால் சுடப்பட்டு 1755ல் பெருமாள் கோவிலின் முன்பு இறைவனை வணங்கியபடி உயிர் துறந்தார். மன்னர் அழகுமுத்துக்கோனின் வம்சத்தில் பலரும் போர்களத்திலேயே உயிரை விட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பு: இவர்போல வீரமிகு கோனேது என்று ஜெகவீரராம பாண்டியரின் பாராட்டுக்குரியவர். மன்னர் அழகுமுத்துக்கோனின் வம்சத்தில் பலரும் போர்களத்திலேயே உயிரை விட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Chinna Alagumuthu kone

Alagumuthukonar Sivagangai Hd Image

அழகுமுத்து சகோதரர்கள்