விடுதலை வீரர் முப்புலிவெட்டி சிங்கமுத்து சேர்வைகோனார்

முப்புலிவெட்டி சிங்கமுத்து சேர்வைகோனார் என்று அழைக்கப்படும் இவர் பாஞ்சாலங்குறிச்சியைச்சேர்ந்த பாளையக்காரர் ஆவார்.
செப்டம்பர் 5, விடுதலை வீரர் முப்புலிவெட்டிசிங்கமுத்துசேர்வைக்கோனாரின் நினைவு நாள். இவரது காலம்(1761-1799). தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 18கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தென்னழகை அல்லது சேவூர் என்று பெயர் கொண்ட ஒட்டபிடாரம் எனும் ஊர்.இதற்கு அழகிய வீரபாண்டிய புரம் என்னும் மற்றொரு பெயரும் உண்டு. ஒட்டபிடாரத்தை யாதவ மரபைச் சேர்ந்த மன்னர் அளகைக்கோன் 12ம் நூற்றாண்டில் ஆட்சி செய்தார்.இவரது ஆட்சி காலத்தில் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தென்கரை எனும் ஊரில் மூலநாத சுவாமி கோவிலை கட்டியுள்ளார். அங்கு இருக்கும் நாற்பது தூண்களிலும் இவரது பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அளகைக்கோன் வழிவந்தவர்கள் திருச்சிற்றம்பலநாத உடையார் அய்யமிடாளுடையக்கோனார் 1755 ஆம் ஆண்டு வரையில் ஆட்சி செய்து வந்தார். அவருக்கு தளபதியாய் சிங்கமுத்துசேர்வைகோனார் விளங்கினார். ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலை போரில் ஓட்டப்பிடாரம் மன்னர் தலைமையில் சிங்கமுத்துசேர்வைகோன் வீரபாண்டியகட்டபொம்மனுக்கு ஆதரவாக பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் போரிட்டு வந்தார்.சிங்கமுத்து சேர்வைகள் காரர்களுக்கு சொந்தமான மொட்டையக்கோன் படையும்,அவரது உறவினர்களான சேர்வைக்கோன் படையினரும்,சம்மந்தக்காரர்களான கட்டாலங்குளத்தைச்சேர்ந்த குமார அழகுமுத்து சேர்வைக்கோன்,இவரது மகன் செவத்தையாக்கோனார் என அனைத்து ஆயர் படைகளும் ஊமைத்துரைக்கு ஆதரவாக போர்களத்தில் இறங்கி சண்டை செய்தனர். போர் இறுதிகட்டத்தை எட்டியவுடன் கட்டபொம்மன்,ஊமைத்துரை உட்பட முக்கியமானவர்களை கோட்டையைவிட்டு ரகசியமாக வெளியேற்றினார் சிங்கமுத்துசேர்வை கோனார். தளபதி சிங்கமுத்துசேர்வை தலைமையிலான ஒருபடை பாஞ்சை கோட்டையின் உட்புறம் இருந்துகொண்டு ஆங்கிலேயர்களை உள்ளே வரவிடாமல் தீரத்துடன் போர் புரிந்தனர்.இடைவிடாமல் நடந்த போரின் முடிவில் தளபதி சிங்கமுத்துசேர்வை ஆங்கிலேயர்களால் சுடப்பட்டு பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்குள்ளேயே செப்டம்பர் 5, 1799ஆம் ஆண்டு வீரமரணம் அடைந்தார். தன் இறுதிமூச்சு உள்ளவரை ஒரு ஆங்கிலேயனைக்கூட கோட்டைக்குள் வரவிடாமல் வீரப்போர் புரிந்தார்.
இந்திய சுதந்திர வரலாற்றில் கட்டபொம்மனுக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரம் இவரைப் போன்ற என்னற்ற வீரர்களுக்கு இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் வேதனையான உண்மை. தமிழர்களது வரலாறுகளை மறைப்பது தமிழர்களே என்பது பொறுத்துக்கொள்ள முடியாத நிலை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Chinna Alagumuthu kone

Alagumuthukonar Sivagangai Hd Image

அழகுமுத்து சகோதரர்கள்