விடுதலை வீரர் முப்புலிவெட்டி சிங்கமுத்து சேர்வைகோனார்
முப்புலிவெட்டி சிங்கமுத்து சேர்வைகோனார் என்று அழைக்கப்படும் இவர் பாஞ்சாலங்குறிச்சியைச்சேர்ந்த பாளையக்காரர் ஆவார். செப்டம்பர் 5, விடுதலை வீரர் முப்புலிவெட்டிசிங்கமுத்துசேர்வைக்கோனாரின் நினைவு நாள். இவரது காலம்(1761-1799). தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 18கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தென்னழகை அல்லது சேவூர் என்று பெயர் கொண்ட ஒட்டபிடாரம் எனும் ஊர்.இதற்கு அழகிய வீரபாண்டிய புரம் என்னும் மற்றொரு பெயரும் உண்டு. ஒட்டபிடாரத்தை யாதவ மரபைச் சேர்ந்த மன்னர் அளகைக்கோன் 12ம் நூற்றாண்டில் ஆட்சி செய்தார்.இவரது ஆட்சி காலத்தில் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தென்கரை எனும் ஊரில் மூலநாத சுவாமி கோவிலை கட்டியுள்ளார். அங்கு இருக்கும் நாற்பது தூண்களிலும் இவரது பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அளகைக்கோன் வழிவந்தவர்கள் திருச்சிற்றம்பலநாத உடையார் அய்யமிடாளுடையக்கோனார் 1755 ஆம் ஆண்டு வரையில் ஆட்சி செய்து வந்தார். அவருக்கு தளபதியாய் சிங்கமுத்துசேர்வைகோனார் விளங்கினார். ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலை போரில் ஓட்டப்பிடாரம் மன்னர் தலைமையில் சிங்கமுத்துசேர்வைகோன் வீரபாண்டியகட்டபொம்மனுக்கு ஆதரவாக பாஞ்சாலங...